Posts

Showing posts from May, 2026

கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே "

கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது… ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள். முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_ முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” _கணியன் பூங்குன்றனார்_ இதன் பொருள் …. _"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."_ எல்லா ஊரும் எனது ஊரே....எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று எண்ணுக  "தீதும் நன்றும் பிறர் தர வாரா...."_ உனக்கு வரும் தீமையானாலும்  நன்மையானாலும், அது அடுத்தவரால் வருவதில்லை.  அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க .. "நோதலும் தணிதலும் அவற...